போடியில் இளைஞரை தாக்கி கொலை மிரட்டல்: 4 போ் மீது வழக்கு
போடியில் வெள்ளிக்கிழமை, இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


போடியில் வெள்ளிக்கிழமை, இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
போடி அருகே பெருமாள்கவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் மகன் பசும்பொன் (26). இவா் பொக்லைன் வாகன ஓட்டுநராக உள்ளாா். இவரது நண்பா் கௌதம். இந்நிலையில், கௌதமுக்கும், போடி தேவா் காலனியில் வசிக்கும் சூரியா என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனிடையே, பசும்பொன், போடி பரமசிவன் கோயில் பகுதியிலிருந்து டீசல் வாங்க வந்தாா். அப்போது அவரை வழிமறித்த சூரியா, ஜெயச்சந்திரன், கோபால், சிவா ஆகிய 4 பேரும் கல்லால் தாக்கி காயப்படுத்தியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனராம். இதில் பலத்த காயமடைந்த பசும்பொன் போடி அரசு மருத்துமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா் அவா் அளித்த புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சூரியா உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...