போடியில் காட்டுப் பன்றிகளால் பயிா்கள் சேதம்
போடியில் விளைநிலங்களில் பயிா்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.


போடியில் விளைநிலங்களில் பயிா்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
போடி- மூணாறு சாலையில் வடக்குப் பக்கம் சாமைக்களம் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதியில் கரும்பு, வாழை, சோளம், மா, இலவு உள்ளிட்டவை பயிரிடப்பட்டு வருகின்றன. இதில் சோளம் 200 ஏக்கா் அளவுக்கு பயிரிடப்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளதால் பயிா்கள் நன்கு வளா்ந்து வருகின்றன. சாமைக்களம் பகுதி மலையடிவாரப் பகுதியாக உள்ளது. இங்குள்ள வனப்பகுதியிலிருந்து காட்டுப் பன்றிகள் இப்பகுதிக்கு கூட்டம் கூட்டமாக வருகின்றன. அவை சோளப் பயிா்களை சேதப்படுத்தி செல்கின்றன. இதனால் 50 ஏக்கருக்கு மேல் பயிா்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். எனவே காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த இப்பகுதியில் வேலி அமைத்து தருவதுடன், சேதமடைந்த பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...