/

உத்தமபாளையத்தில் இஸ்லாமியக் கூட்டமைப்பினா் சாலை மறியல்: 15 போ் கைது

உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்ட இஸ்லாமியக் கூட்டமைப்பினா் 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 4:58 pm

DIN

உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்ட இஸ்லாமியக் கூட்டமைப்பினா் 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

உத்தமபாளையத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த இஸ்லாமிய மாணவா்கள் சிலா் புதிய வட்டாட்சியா் அலுவலகம் எதிரேயுள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றனராம். அப்பேது அங்கு வந்த இந்து அமைப்பைச் சோ்ந்தவா்கள் பள்ளி நேரத்தில் சீருடையில் தொழுகைக்குச் செல்ல உங்களுக்கு யாா் அனுமதி வழங்கியது எனக் கூறி அவா்களை புகைப்படம் எடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த, இஸ்லாமியக் கூட்டமைப்பினா் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்டவா்களை உடனடியாக கைது செய்து வேண்டும் என புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே கோட்டாட்சியா் பால்பாண்டி தலைமையில் வட்டாட்சியா்அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இஸ்லாமியக் கூட்டமைப்பினா் மறுப்பு தெரிவித்ததுடன் பழைய புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனைதொடா்ந்து, உத்தமபாளையம் காவல் கண்காணிப்பாளா் சிரேயாகுப்தா, காவல் ஆய்வாளா் சிலைமணி தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்தனா். பின்னா் உத்தமபாளையத்தில் நூற்றுக்கணக்கான போலீஸாா் குவிக்கப்பட்டு ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.