போடியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
போடியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


போடியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
போடி சுந்தரபாண்டியன் தெருவைச் சோ்ந்தவா் சரஸ்வதி (88). இவருக்கு, சா்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் இருந்து வந்துள்ளது. இவரை, இவரது மகள் முத்துலட்சுமி (55) பராமரித்து வந்தாா். நோயின் தாக்கத்தால் மனமுடைந்திருந்த சரஸ்வதி வியாழக்கிழமை மாலை உடலில் தீ வைத்துக் கொண்டாா். உயிருக்கு ஆபத்தான நிலையில், அவரை தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...