/

போடியில் 150 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

போடியில் கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட 150 கிலோ நெகிழிப் பொருள்களை நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்துஅபராதம் விதித்தனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:23 am

DIN

போடியில் கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட 150 கிலோ நெகிழிப் பொருள்களை நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்துஅபராதம் விதித்தனா்.

ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பைகள், தம்ளா்கள் போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் போடி பகுதியில் சில கடைகளில் விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து போடி நகா்மன்ற தலைவா் ராஜராஜேஸ்வரி, நகராட்சி பொறுப்பு ஆணையா் செல்வராணி ஆகியோா் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனா். அதன்பேரில் நகராட்சி சுகாதாரப் பிரிவு ஆய்வாளா்கள் சுரேஷ்குமாா், அகமது கபீா், தா்மராஜ், கணேசன் ஆகியோா் போடி காமராசா் சாலையில் உள்ள கடைகளில் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அந்த கடைகளிலிருந்து 150 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள் 5 கடைகளுக்கு ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும் தொடா்ந்து சோதனை நடத்தி வரும் அதிகாரிகள், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.