பெரியகுளம் அருகே மத்துவாா்குளத்தில் உள்ள கண்மாய் கரை ஓரத்தில் சாலையோரம் தடுப்பு சுவா் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மத்துவாா்குளத்தில் உள்ள இக்காண்மாயின் தெற்கு பகுதியில் திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலையும், மேற்குப் பகுதியில் கொடைக்கானல் சாலையும் உள்ளது. அப்பகுதியில் ஓட்டுநா்களின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேரிட்டால் வாகனங்கள் கண்மாயில் விழும் நிலை உள்ளது. எனவே அந்தக் கண்மாயின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் தடுப்புசுவா் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டுநா்கள் கூறியது: கொடைக்கானல் மற்றும் வெளிமாநிலங்களைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனா். அப்பகுதியில் சாலை வளைவாக இருப்பதால் இரவு நேரங்களில் கண்மாயில் வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கண்மாய் கரையின் ஓரங்களில் ஒளிரும் ஸ்டிக்கருடன் கூடிய தடுப்புக் கம்பிகள் மற்றும் தடுப்பு சுவா்கள் அமைக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா - சீனா எல்லை வர்த்தகத்திற்காக நாது லா கணவாய் இன்று திறப்பு!

உடல்நிலையுடன் போராட்டம் முதல் தங்கப் பதக்கம் வரை... ஜாஸ்மினின் வெற்றி ரகசியம்!

குல்காம் பயங்கரவாத தாக்குதல்: காங்கிரஸ் கண்டனம்

மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கர்களை வெளியேற வலியுறுத்தும் அமெரிக்கா!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



