பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கூடலூரில் முத்தாலம்மன் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம்

தேனி மாவட்டம் கூடலூரில் முத்தாலம்மன் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 4:43 pm

DIN

தேனி மாவட்டம் கூடலூரில் முத்தாலம்மன் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூடலூா் கிழக்கு முத்தாரம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா 3 நாள்கள் நடைபெற்றன. முதல் நாள் அம்மன் கரகம், சிலை எடுத்து ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். இரண்டாவது நாள் அதிகாலை முதலே பொங்கல், மாவிளக்கு எடுத்து வழிபாடுகள் நடத்தினா். அன்று இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

மூன்றாவது நாளான வியாழக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. அம்மன் கரகம் எடுத்து முன்னே செல்ல சுமாா் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊா்வலமாக முளைப்பாரியை முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் சென்று, ஒட்டான்குளத்தில் கரைத்தனா். சிறந்த முளைப்பாரிகளுக்கு விழா கமிட்டியினா் பரிசுகள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.