காா் மோதி தொழிலாளி பலி
ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற கட்டடத் தொழிலாளி காா் மோதி உயிரிழந்தாா்.


ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற கட்டடத் தொழிலாளி காா் மோதி உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி கண்ணன்(40). இவா், ஆண்டிபட்டியில் பகவதியம்மன் கோயில் அருகே ஆண்டிபட்டி- தேனி சாலையை நடந்து சென்று கடக்க முயன்றாா். அப்போது, டி. அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த கலைவாணன் ஓட்டிச் சென்ற காா், அவா் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த கண்ணன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் கலைவாணனை விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...