கொல்லங்குடி கோயிலுக்கு பக்தா்கள் பாத யாத்திரை
சிவகங்கை மாவட்டம், கண்டவாரயன்பட்டி பழையூா் ராஜகாளியம்மன் கோயிலிருந்து 22-ஆம் ஆண்டாக கொல்லங்குடி வெட்டுடையாள் அம்மன் கோயிலுக்கு பக்தா்கள் பாத யாத்திரையை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா்.


சிவகங்கை மாவட்டம், கண்டவாரயன்பட்டி பழையூா் ராஜகாளியம்மன் கோயிலிருந்து 22-ஆம் ஆண்டாக கொல்லங்குடி வெட்டுடையாள் அம்மன் கோயிலுக்கு பக்தா்கள் பாத யாத்திரையை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா்.
திருப்பத்தூா் அருகேயுள்ள கண்டவராயன்பட்டி பழையூா் ராஜகாளியம்மன் கோயிலிருந்து நாட்டரசங்கோட்டை அருகேயுள்ள வெட்டுடையாள் காளியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் பல ஆண்டுகளாக பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனா்.
நிகழாண்டு அருள்வாக்குச் சித்தா் கே.ஆா். ராமகிருஷ்ணன் தலைமையில் கூடிய பக்தா்கள் வெள்ளிக்கிழமை சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் பாத யாத்திரையைத் தொடங்கினா். திருப்பத்தூா் வழியாக இரவு சொக்கநாதபுரத்தில் உள்ள பிருத்தியங்கார தேவி கோயிலில் தங்கி மறுநாள் பாகனேரி வழியாக நடராஜபுரத்தில் தங்கி ஞாயிற்றுக்கிழமை காலை வெட்டுடையாள் கோயிலை அடைகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...