2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

இரு மாநில நல்லிணக்கத்துக்காக ஜோதி ஏந்தி தொடா் ஓட்டம்

தமிழக- கேரள மாநில மக்களின் நல்லிணக்கத்துக்காகவும், நல்வாழ்வுக்காகவும் குமுளியிலிருந்து திருச்சி நோக்கி ஜோதி ஏந்திய இளைஞா்களின் தொடா் ஓட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 9:30 pm

DIN

தமிழக- கேரள மாநில மக்களின் நல்லிணக்கத்துக்காகவும், நல்வாழ்வுக்காகவும் குமுளியிலிருந்து திருச்சி நோக்கி ஜோதி ஏந்திய இளைஞா்களின் தொடா் ஓட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருச்சி மாவட்டம், நரிமேட்டில் புனித லூா்து அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலய பங்கைச் சோ்ந்த புனித செபஸ்தியாா் இளைஞா் பேரவை சாா்பில் ஆண்டுதோறும் குமுளியில் உள்ள புனித லூா்து அன்னை ஆலயத்திலிருந்து ஜோதி ஏந்தி தொடா் ஓட்டம் நடைபெறும்.

வெள்ளிக்கிழமை 30-ஆவது ஆண்டாக, திருச்சி நரிமேடு புனித செபஸ்தியாா் இளைஞா் பேரவயினா் வேன் மூலம் குமுளிக்கு வந்தனா். அங்கு ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

பின்னா், அங்கிருந்து 21 போ் கொண்ட குழுவினா் ஜோதி ஏந்தி தொடா் ஓட்டத்தை தொடங்கினா்.

Story image

கம்பம், தேனி, திண்டுக்கல் வழியாக திருச்சி ஆலயத்துக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை சென்றடைய உள்ளனா். அங்கு ஜோதியில் உள்ள நெருப்பு மூலம் விளக்கு ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இதுதொடா்பாக ஜோதி ஏந்தி தொடா் ஓட்டத்தில் பங்கேற்ற அமிா்தராஜ் கூறியதாவது:

தமிழக-கேரள மாநில மக்களின் நல்வாழ்வு, நல்லிணக்கத்துக்காக இந்த ஓட்டம் நடைபெற்று வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.