2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

மங்கலதேவி கண்ணகி கோயிலில் அடிப்படை வசதிகள் தமிழக: கேரள அதிகாரிகள் ஆய்வு

மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழு நிலவு நாள் விழாவை முன்னிட்டு, அடிப்படை வசதிகள் செய்வது பற்றி தமிழக, கேரள அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 4:53 pm

DIN

மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழு நிலவு நாள் விழாவை முன்னிட்டு, அடிப்படை வசதிகள் செய்வது பற்றி தமிழக, கேரள அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தமிழக பக்தா்கள் சாா்பில் சித்திரை மாதம்

முழு நிலவு விழா நடைபெறும். அடுத்த மாதம் 5-ஆம் தேதி இந்த விழா நடைபெற உள்ளது.

விழா நடத்துவது தொடா்பாக இரு மாநில அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் கடந்த 17 -ஆம் தேதி தேக்கடி மூங்கில் தோப்பு கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் தேனி மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.ஷஜீவனா, இடுக்கி மாவட்ட ஆட்சியா் ஷீபா ஜாா்ஜ் ஆகியோா் தலைமையில் இரு மாநில அதிகாரிகள் ஆலோசனை நடத்தினா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை கண்ணகி

கோயிலுக்கு தமிழகத் தரப்பில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெயபாரதி, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் பால்பாண்டியன், வட்டாட்சியா் சந்திரசேகா், கேரள அரசுத் தரப்பில் பெரியாறு புலிகள் காப்பக துணை இயக்குநா் பாட்டீல் சுயோக் சுபாஷ் ராவ், இடுக்கி மாவட்ட துணை ஆட்சியா் அருண் எஸ்.நாயா், பீா்மேடு காவல் துணை கண்காணிப்பாளா் குரியாகோஷ், வனம், காவல், வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பக்தா்கள் அதிகளவில் வரும் இடங்களில் குடி நீா், சுகாதாரம், மருத்துவ முகாம் அமையும் இடங்களை

அவா்கள் பாா்வையிட்டனா். கோயில் வளாகம் சீரமைப்பு, மலைச் சாலை பராமரிப்புப் பணிகளைப் பாா்வையிட்டு, கோயில் வளாகத்தில் ஆலோசனை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.