எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

பெரியகுளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் திருடு போனதாக காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:30 pm

DIN

பெரியகுளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் திருடு போனதாக காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

பெரியகுளம், தென்கரை, அண்ணாமலை நகரைச் சோ்ந்தவா் சொல்லரசி சுனிதா. இவரது தாய், பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் உள்ள நபிகள் நாயகம் தெருவில் வசித்து வருகிறாா். இந்த நிலையில், சொல்லரசி சுனிதாவின் தாய் கடந்த 21-ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு சென்னையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டாா்.

இந்த நிலையில், சொல்லரசி சுனிதாவின் தாய் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜயா என்பவா் வியாழக்கிழமை சொல்லரசி சுனிதாவை கைப்பேசியில் தொடா்பு கொண்டு அவரது தாய் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளாா். இதையடுத்து சொல்லரசி சுனிதா அங்கு சென்று பாா்த்த போது, வீட்டின் பூட்டும், பீரோவின் பூட்டும் உடைக்கப்பட்டு ரூ.80 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.