சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: 3-ஆவது நாளாக குளிக்கத் தடை
தேனி மாவட்டம், சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.


தேனி மாவட்டம், சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.
சுருளி அருவிக்கு, தற்போது கோடை விடுமுறைக் காலம் என்பதால், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக உள்ளது.
இந்தநிலையில், தற்போது கோடை மழை பெய்து வருவதால் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, பிற்பகல் நேரங்களில் அருவியில் நீா்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சுருளி அருவியில் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.
இதுகுறித்து கம்பம் கிழக்கு வனச் சரகா் வி. பிச்சைமணி கூறியதாவது:
சுருளி அருவியின் நீா்வரத்துப் பகுதிகள் அடா்ந்த வனப் பகுதிக்குள் உள்ளன. கோடை மழை திடீரென பெய்வதால், நீா்வரத்தும் திடீரென அதிகரிக்கிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. நீா்வரத்து தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீா்வரத்து குறைந்ததும் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...