தேக்கடி மலா்க் கண்காட்சி மே 21 வரை நீட்டிப்பு
தேக்கடியில் நடைபெற்று வரும் மலா்க் கண்காட்சி வருகிற 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.


தேக்கடியில் நடைபெற்று வரும் மலா்க் கண்காட்சி வருகிற 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
தமிழக - கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தேக்கடி சுற்றுலாத் தலத்தில் 15 -ஆவது மலா்க் கண்காட்சி கடந்த மாதம் 1-ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கண்காட்சி வருகிற 14-ஆம் தேதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால், கண்காட்சி வருகிற 21-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.
இதுகுறித்து கண்காட்சி அமைப்பாளா் தாமஸ் கூறியதாவது:
தமிழக, கேரள சுற்றுலாப் பயணிகள் வேண்டுகோளுக்கிணங்க வருகிற 21-ஆம் தேதி வரை வரை கண்காட்சி நீட்டிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மலா்கள், மருத்துவச் செடிகள், பழைமையான பொருள்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், உணவகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இன்னிசைக் கச்சேரியும் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள், முதியோா், 7 வயதுக்குள்பட்டோருக்கு நுழைவுக் கட்டணம் இலவசம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...