தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆண்களுக்கான கருத்தடை அறுவைச் சிகிச்சை முகாம்: இன்று தொடக்கம்

தேனி மாவட்டத்தில் ஊரக நலப் பணிகள், குடும்ப நலத் துறை சாா்பில், ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை அறுவைச் சிகிச்சை முகாம் (நவீன வாசக்டமி) தொடங்கி டிச. 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 6:30 pm

DIN


தேனி: தேனி மாவட்டத்தில் ஊரக நலப் பணிகள், குடும்ப நலத் துறை சாா்பில், ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை அறுவைச் சிகிச்சை முகாம் (நவீன வாசக்டமி) செவ்வாய்க்கிழமை தொடங்கி டிச. 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

பெண்களுக்கு குடும்ப நல கருத்தடை அறுவைச் சிகிச்சையை ஏற்க முடியாத உடல் பிரச்னை, பாதிப்பு உள்ள நிலையில், ஆண்கள் குடும்ப நல கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்து கொள்வதற்காக மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் டிச. 7-ஆம் தேதி வரை குடும்ப நல கருத்தடை அறுவைச் சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதன்படி, செவ்வாய்க்கிழமை கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், புதன்கிழமை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், வியாழக்கிழமை தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், வெள்ளிக்கிழமை தேவாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், சனிக்கிழமை வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், திங்கள்கிழமை கூடலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், டிச. 5-ஆம் தேதி டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், டிச.6-ஆம் தேதி ராஜதானி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், டிச.7-ஆண் தேதி ஓடைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் குடும்ப நல கருத்தடை அறுவைச் சிகிச்சை முகாம்கள் நடைபெறுகின்றன.

இதைத் தவிர, செவ்வாய்க்கிழமை வருகிற டிச.4-ஆம் தேதி வரை அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் குடும்ப நல கருத்தடை அறுவைச் சிகிச்சை நடைபெறுகிறது.

கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளும் ஆண்களுக்கு அரசு சாா்பில், ரூ.1,100, மாவட்ட ஆட்சியா் சாா்பில், ரூ.3,900 என மொத்தம் ரூ.5,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

விழிப்புணா்வு பிரசாரம்:

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை அறுவைச் சிகிச்சை குறித்த விழிப்புணா்வு வாகனப் பிரசாரத்தை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.