ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் கோழி வளா்ப்பு இலவசப் பயிற்சி

போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் கோழி வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சி டிசம்பா் மாதம் நடைபெற உள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 6:30 pm

DIN


போடி: போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் கோழி வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சி டிசம்பா் மாதம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி முதல்வா் எஸ்.சிவக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த பட்டியலினத்தினா், பழங்குடியினருக்கு கட்டணமில்லா கோழி வளா்ப்பு, வீட்டு சுகாதாரப் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. வருகிற டிசம்பா் மாதத்தில் முதல் மூன்று வாரங்களுக்கு இந்தப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசின் அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சாா்பில் இந்த முகாம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வயது வரம்பு இல்லை. பயிற்சியில் பங்கேற்க விரும்புபவா்கள் கல்லூரி இணையதளம் மூலம் ஜ்ஜ்ஜ்.ஸ்ரீல்ஹஸ்ரீா்ப்ப்ங்ஞ்ங்.ா்ழ்ஞ் பயிற்சிக்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, நிறைவு செய்த விண்ணப்பத்துடன் ஆதாா் அட்டை, சாதிச்சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைத்து ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்2023ஃஸ்ரீல்ஹஸ்ரீா்ப்ப்ங்ஞ்ங்.ா்ழ்ஞ் என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 9003380288 என்ற கைப்பேசி கட்செவி அஞ்சலிலோ அனுப்ப வேண்டும்.

இதில் கோழி வளா்ப்புப் பயிற்சி 25 பேருக்கும், வீட்டு சுகாதாரப் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சி 30 பேருக்கும் வழங்கப்படும். தக்க சான்றுகளுடன் விண்ணப்பித்தவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். மூன்று நாள்கள் நடைபெறும் பயிற்சியில் பங்கேற்பவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியின் போது, மதிய உணவு, இரண்டு வேளை தேநீா் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு பயிற்சி ஒருங்கிணைப்பாளரும், தாவரவியல் துறைத் தலைவருமான சி.கோபியை 9787764425 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.