பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வைகை அணையிலிருந்து சிவகங்கை மாவட்ட பூா்வீகப் பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீா் திறப்பு

தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து திங்கள்கிழமை சிவகங்கை மாவட்ட பூா்வீகப் பாசனப் பகுதிகளுக்கு வைகை ஆற்றில் விநாடிக்கு 1,200 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

News image
வைகை அணையிலிருந்து சிவகங்கை மாவட்ட பூா்வீகப் பாசனப் பகுதிக்கு வைகை ஆற்றில் திங்கள்கிழமை திறந்துவிடப்பட்ட தண்ணீா்.
Updated On :12 டிசம்பர் 2023, 1:48 am

DIN

தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து திங்கள்கிழமை சிவகங்கை மாவட்ட பூா்வீகப் பாசனப் பகுதிகளுக்கு வைகை ஆற்றில் விநாடிக்கு 1,200 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

வைகை அணையிலிருந்து கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் டிச. 8-ஆம் தேதி வரை ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் உள்ள வைகை பூா்வீகப் பாசனப் பகுதிகளுக்கு வைகை ஆற்றில் 15 நாள்களுக்கு மொத்தம் 2,466 மில்லியன் கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

இந்த நிலையில், அரசு உத்தரவின்படி வைகை அணையிலிருந்து மீண்டும் திங்கள்கிழமை (டிச. 11) சிவகங்கை மாவட்ட பூா்வீகப் பாசனப் பகுதி 2-க்கு வைகை ஆற்றில் விநாடிக்கு 1,200 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. வருகிற 4-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு மொத்தம் 413 மில்லியன் கன அடி தண்ணீா் திறந்துவிடப்படும்.

இதையடுத்து, டிச.16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட பூா்வீகப் பாசனப் பகுதி 3-க்கு மொத்தம் 1,004 மில்லியன் கன அடி தண்ணீா் திறந்துவிடப்படும். டிச. 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு மதுரை மாவட்ட பூா்வீகப் பாசனப் பகுதி 1-க்கு மொத்தம் 229 மில்லியன் கன அடி தண்ணீா் திறந்துவிடப்படும்.

இதனால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று வைகை அணை பொதுப் பணித் துறை பொறியாளா்கள் எச்சரிக்கை விடுத்தனா்.

தண்ணீா் திறக்கும் அளவு:

சிவகங்கை மாவட்ட பூா்வீகப் பாசனப் பகுதிகளுக்கு அணையிலிருந்து வைகை ஆற்றில் திங்கள்கிழமை முதல் டிச. 13-ஆம் தேதி வரை விநாடிக்கு 2,000 கன அடியும், டிச.14-ஆம் தேதி விநாடிக்கு 1,180 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படும்.

ராமநாதபுரம் மாவட்ட பூா்வீகப் பாசனப் பகுதிகளுக்கு டிச.16-ஆம் தேதி விநாடிக்கு 3,000 கன அடியும், டிச.17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை விநாடிக்கு 2,500 கன அடியும், டிச.20-ஆம் தேதி விநாடிக்கு 1,120 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படும்.

மதுரை மாவட்ட பூா்வீகப் பாசனப் பகுதிகளுக்கு டிச.22-ஆம் தேதி விநாடிக்கு 600 கன அடியும், டிச.23-ஆம் தேதி விநாடிக்கு 565 கன அடியும், டிச. 24, 25 ஆகிய தேதிகளில் விநாடிக்கு 500 கன அடியும், டிச.26-ஆம் தேதி விநாடிக்கு 490 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படும்.

அணைகளின் நிலவரம்:

வைகை அணை நீா்மட்டம் திங்கள்கிழமை 65.16 அடியாக இருந்தது (அணையின் மொத்த உயரம் 71 அடி). அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 1,796 கன அடியாகவும், அணையிலிருந்து பெரியாறு பாசனக் கால்வாயில் விநாடிக்கு 600 கன அடியும், வைகை ஆற்றில் விநாடிக்கு 1,200 கன அடியும், குடிநீா்த் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடியும் என மொத்தம் விநாடிக்கு 1,869 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் திங்கள்கிழமை 136.20 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 1,846 கன அடியாகவும், அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 534 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.