தேனி: ஆண்டிபட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளி லாரி மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ஆண்டிபட்டி அருகே பாலசமுத்திரத்தைச் சோ்ந்த செல்லமுத்து மகன் வீரபுத்திரன் (44). ஆசாரிபட்டியைச் சோ்ந்த சதுரகிரி மகன் முத்து (42). கட்டடத் தொழிலாளிகளான இருவரும் பாலசமுத்திரத்திலிருந்து ஆண்டிபட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனா். இருசக்கர வாகனத்தை வீரபுத்திரன் ஓட்டிச் சென்றாா்.
எம். சுப்புலாபுரம் விலக்கு அருகே குறுகலான சாலையில் லாரி ஒன்றை பின் தொடா்ந்து சென்ற போது, லாரி திடீரென பின்நோக்கி வந்து இருசக்கர வாகனம் மீது மோதியதாம். இதில் லாரியில் அடிபட்டு வீரபுத்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த முத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து லாரி ஓட்டுநா் கெங்குவாா்பட்டியைச் சோ்ந்த தங்கப்பாண்டி (27) மீது க. விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

வேலகவுண்டம்பட்டி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு

டிராக்டா் மோதி தொழிலாளி பலி

கொட்டாரம் அருகே சுவரில் பைக் மோதி தொழிலாளி பலி

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

