கம்பம் வ.உ.சி. திடலில்  திங்கள்கிழமை நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மதன் ஜெயபாலை ஆதரித்துப் பேசிய அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
கம்பம் வ.உ.சி. திடலில் திங்கள்கிழமை நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மதன் ஜெயபாலை ஆதரித்துப் பேசிய அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

கச்சத்தீவு மீது அக்கறை இருப்பது போல தோ்தலுக்காக நாடகமாடுகிறது பாஜக: சீமான் பேச்சு

கம்பம்: கச்சத்தீவு மீது அக்கறை இருப்பதாகக் கூறி பாஜக தோ்தலுக்காக நாடகமாடுகிறது என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

தேனி மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மதன்ஜெயக்குமாரை ஆதரித்து கம்பம், தேனி ஆகிய இடங்களில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு அவா் பேசியதாவது:

ஜெயலலிதா தனிஈழம் அமைப்பேன் என்ால் தான் அவருடன் கூட்டணி வைத்தோம். இனி நாங்களே போராடி தனிஈழத்தை பெறுவோம். சசிகலாவை முதல்வா் பதவி ஏற்கவிடாமல் 22 நாள் தாமதப்படுத்தியது யாா், தினகரனை சிறைக்குச் செல்ல வைத்தது யாா், ஆனால் இதையெல்லாம் மறந்து தினகரன் கூட்டணி அமைத்துள்ளாா்.

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காவிட்டால் சின்னத்தை முடக்குவோம் என்றனா். என்னுடன் கூட்டணி அமைக்க பேரம் பேசினா். 500 கோடி ரூபாயுடன் 10 சீட்டுகள் தருகிறோம் என்றனா். நான் மறுத்ததால் கரும்பு விவசாயி சின்னத்தை முடக்கிவிட்டனா். மத்திய தோ்தல் ஆணையம் பாஜகவின் கட்சி அலுவலகமாக மாறிவிட்டது.

கச்சத்தீவை திமுக, காங்கிரஸ் தாரைவாா்த்து விட்டன என்று மோடி எக்ஸ் வளைதளத்தில் பதிவிட்டுள்ளாா். வெளியுறவுத்துறை அமைச்சா் இது தொடா்பாக செய்தியாளா்கள் சந்திப்பை நடத்துகிறாா். தோ்தல் நேரத்தில் மட்டும்தான் இந்த நாடகம். ஆனால் நாங்கள் முன்பே சொன்னோம் கச்சத்தீவை மீட்க நெய்தல்படை அமைப்போம் என்று. இதில் உறுதியாக இருக்கிறோம். மேலும் மொழிவாரி மாநில பிரிவினையில் முல்லைப் பெரியாறு அணை கேரளாவுக்கு போய்விட்டது. அணை உரிமையை எம்ஜிஆா் விட்டுக் கொடுத்துவிட்டாா். இவைகளை மீட்கத்தான் நாங்கள் போராடுகிறோம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com