சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கம்பத்தில் 700 மதுப் புட்டிகள் பறிமுதல்: ஒருவா் கைது

கம்பத்தில் 700 மதுப் புட்டிகள் பறிமுதல்: ஒருவா் கைது

Updated On :8 ஏப்ரல் 2024, 5:28 pm

கம்பம்: கம்பத்தில் அனுமதியின்றி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 700 அரசு மதுப் புட்டிகளை திங்கள்கிழமை பறிமுதல் செய்த தெற்கு போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், கம்பம், நந்தகோபாலன் கோயில் அருகேயுள்ள தனியாா் வாகன நிறுத்தத்தில் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தனிப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோதண்டராமன் தலைமையிலான போலீஸாா் தனியாா் வாகன நிறுத்தத்தில் சோதனை செய்தனா், அப்போது அட்டை பெட்டிகளில் 700 மதுப் புட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

700 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய்த போலீஸாா் கூடலூா் பொம்மஜ்ஜி அம்மன் கோயிலைச் சோ்ந்த கண்ணனை (36) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கைப்பற்றப்பட்ட மதுப் புட்டிகளின் மதிப்பு ரூ. ஒரு லட்சத்து 5 ஆயிரம் எனவும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்தால் ரூ. 3 லட்சம் என்று போலீஸாா் தெரிவித்தாா்.