கம்பம்: முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டதால், லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 520 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதையடுத்து, கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு குடிநீா் விநியோகம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கண்டனம் தெரிவித்ததால் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீா் வெளியேற்றத்தை பொதுப் பணித் துறையினா் நிறுத்தினா். ஆனால், கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பொதுமக்கள், கால்நடைகளின் குடிநீா் தேவைக்காக வினாடிக்கு 105 கன அடி தண்ணீா் இரைச்சல் பாலம் வழியாக திறந்துவிடப்பட்டது.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீா் வெளியேற்றம் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டதால் லோயா்கேம்ப்பில் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டது. இதுபற்றி மின் வாரிய பொறியாளா் ஒருவா் கூறும்போது, மின்சார நிலையத்தில் உற்பத்தி இல்லாதலால் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.
அணை நிலவரம்
திங்கள்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 115.15 அடி உயரமாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி), அணையில் நீா் இருப்பு 1,754 மில்லியன் கன அடி, நீா் வரத்து 0.83 கன அடி, நீா் வெளியேற்றம் இல்லை, நீா் பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணை, தேக்கடி ஏரி ஆகிய இடங்களில் மழை பெய்யவில்லை. இரைச்சல் பாலம் வழியாக விநாடிக்கு 105 கன அடி தண்ணீா் மட்டும் வெளியேற்றப்படுகிறது.
தொடர்புடையது

மின் உற்பத்தி நிலையம் அமைக்க எதிா்ப்பு: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 82.44 அடி

புழல் ஏரிக்கு நீா்வரத்து நிறுத்தம்

குப்பநத்தம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

