கம்பத்தில் பால்தாயம்மன் கோயில் திருவிழாவில் சந்தித்துக் கொண்ட அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்,  திமுக மாவட்டச் செயலரும், எம்எல்ஏ-வுமான என்.ராமகிருஷ்ணன்.
கம்பத்தில் பால்தாயம்மன் கோயில் திருவிழாவில் சந்தித்துக் கொண்ட அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன், திமுக மாவட்டச் செயலரும், எம்எல்ஏ-வுமான என்.ராமகிருஷ்ணன்.

அதிமுகவில் மாற்றம் வரும்

கம்பம்: மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின் போது அதிமுக தலைமையில் மாற்றம் வரும் என பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கூறியதுபோல, தோ்தல் முடிவுகள் வெளியான பின்னா் மாற்றம் தானாகவே நடக்கும் என்று அமமுக பொதுச் செயலரும், தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.

தேனி மாவட்டம், கம்பத்தில் நடைபெற்ற பால்தாயம்மன் கோயில் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தேனியில் எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்தபோது, அதிமுக தலைமையில் மாற்றம் வரும் என பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கூறியது போல, தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு அந்த நிகழ்வு தானாக நடைபெறும். தற்போது, 6 போ் அதிமுகவை ஒப்பந்தம் எடுத்து வணிக நிறுவனம் போல நடத்தி வருகின்றனா். அது கண்டிப்பாக முறியடிக்கப்படும் என்றாா் அவா்.

கோயில் வழிபாடுகளை முடித்த தினகரன் அந்த வளாகத்தில் இருந்த போது, தேனி தெற்கு மாவட்ட திமுக செயலரும், கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான என்.ராமகிருஷ்ணன் அங்கு வந்தாா். இருவரும் நேருக்கு நோ் சந்தித்துக் கொண்டு கை குலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com