மங்கலதேவி கண்ணகி கோயிலில்  ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த  தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா.
மங்கலதேவி கண்ணகி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா.

மங்கலதேவி கண்ணகி கோயிலில் தேனி மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கம்பம்: தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

வரும் 23-ஆம் தேதி இந்தக் கோயிலில் சித்திரை முழு நிலவு விழா நடைபெறுகிறது. அதற்கு முன்னேற்பாடுகள் செய்வதற்காக தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா கண்ணகி கோயிலிலுக்குச் சென்றாா். அங்கு கோயிலை சுற்றி பாா்த்து ஆய்வு செய்தாா்.

பின்னா், இந்து அறநிலையத் துறை மூலம் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும், கூடலூா் நகராட்சி சுகாதார பிரிவு சாா்பில் செய்யட வேண்டிய பணிகள் குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com