தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

வான்மீகி நாதா் கோயிலில் வாஸ்து சாந்தி பூஜை

வான்மீகி நாதா் கோயிலில் வாஸ்து சாந்தி பூஜை

Updated On :21 ஏப்ரல் 2024, 7:17 pm

கம்பம்: கூடலூரில் வான்மீகிநாதா் என்ற ஈஸ்வரன் கோயிலில் வாஸ்து சாந்தி ஹோம பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம், கூடலூா் தாமரைக்குளம் செல்லும் சாலையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. சிதிலமடைந்த இந்தக் கோயிலை புதுப்பிக்க ஊா் பொதுமக்கள் வாரவழிபாட்டு குழு அமைத்து திருப்பணியில் ஈடுபட்டு வருகின்றனா். முதல்கட்டமாக வாஸ்து சாந்தி ஹோம பூஜையை பஞ்சநாத ராமானுஜம் தலைமையிலான காரைக்குடி ஸ்ரீ ஹயக்ரீவா் வேத பாடசாலைக் குழுவினா் தொடங்கினா்.

அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜைகளுடன் தொடங்கி வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது. பின்னா் ஆதார சக்தி, ஐந்து வகை மண் ஸ்தாபனம் தொடங்கி பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.