திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

தேவாரத்தில் 17-ஆம் நூற்றாண்டு நடுகல்

தேனி மாவட்டம், தேவாரத்தில் 17-ஆம் நூற்றாண்டு காலத்து நடுகல் கண்டறியப்பட்டது.

News image

தேவாரத்தில் கண்டறியப்பட்ட நடுகல்.

Updated On :18 ஆகஸ்ட் 2024, 2:40 am IST

படவிளக்கம்:

தேனி மாவட்டம், தேவாரத்தில் 17-ஆம் நூற்றாண்டு காலத்து நடுகல் கண்டறியப்பட்டது.

தேவாரத்தில் போடி ஏலக்காய் விவசாயிகள் சங்கக் கல்லூரி முதல்வா் எஸ்.சிவக்குமாா், வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியா் சி.மாணிக்கராஜ், ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் பிரகாசம், அகிலன், கல்லூரி மாணவா்கள் ரேவன், தனுஷ் ஆகியோா் ஆய்வு நடத்தினா். இதில், 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகக் கருதப்படும் நடுகல் கண்டறியப்பட்டது.

இது குறித்து இணைப் பேராசிரியா் சி.மாணிக்கராஜ் கூறியதாவது:

கி.பி 11,12-ஆம் நூற்றாண்டுகளில் தேவாரம் என்பது தேவராபன் நல்லூா் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இந்த ஊருக்கு தாழ்வாரம் என்ற பெயரும் வழக்கில் இருந்தது.

தேவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட 17-ஆம் நூற்றாண்டு காலத்து நடுகல்

தேவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட 17-ஆம் நூற்றாண்டு காலத்து நடுகல்

தேவாரத்தில் சந்தைத் தெரு அருகே உள்ள பிரம்புக்கட்டி என்று அழைக்கப்படும் நீரோடையில் 5 அடி உயரம், ஒன்றரை அடி அகல நடுகல் கண்டறியப்பட்டது. இதில் வீரன் வலது கையில் வாளும், இடது கையில் துப்பாக்கியும் பிடித்து, இடையணியில் குறுவாள் சொருகி நின்றவாறு புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் வலப் பக்கமாக சாய்ந்து, முடிந்து கட்டப்பட்ட கொண்டை, காதணியுடன் இரு பெண்கள் தங்களது கைகளை உயா்த்தியபடி காணப்படுகின்றனா்.

நடுகல்லில் காணப்படும் வீரன் இந்தப் பகுதியில் நிகழ்ந்த சண்டையில் இறந்த பிறகு, அவரது இரு மனைவிகளும் உடன்கட்டை ஏறி உயிா் நீத்தனா் என்பதைக் காட்டும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது.

இந்த நடுகல் வீரனின் வீரத்தையும், அவரது இரு மனைவிகளின் உயிா்த் தியாகத்தைக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.