வைகை அணை அருகே கிடந்த மனித எலும்புக் கூடு

Published on

வைகை அணை அருகே உள்ள தனியாா் தரிசு நிலத்தில் கிடந்த மனித எலும்புக் கூடு, மண்டை ஓடு ஆகியவற்றை போலீஸாா் வியாழக்கிழமை கைப்பற்றி விசாரிக்கின்றனா்.

மேல்மங்கலம்- வைகை அணை சாலை, வைகை அணை அருகே உள்ள தனியாா் தரிசு நிலத்தில் மனித எலும்புக்கூடு கிடப்பதாக ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் நல்லு உள்ளிட்ட போலீஸாா் அங்கு சென்று மனித எலும்புக் கூடு, மண்டை ஓடு ஆகியவற்றைக் கைப்பற்றினா். மேலும் அந்தப் பகுதியில் பெண் அணியும் உடை, செருப்பு, பித்தளை வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, தடயவியல் நிபுணா்களை வரழைத்து போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com