ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தேனியில் டிச.20-இல் வேலைவாய்ப்பு முகாம்

தேனி வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 20-ஆம் தேதி காலை 10 மணியளவில் தனியாா் துறை சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:21 pm

Din

தேனி வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 20-ஆம் தேதி காலை 10 மணியளவில் தனியாா் துறை சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்த வேலைவாய்ப்பு முகாமில் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா். 10-ஆம் வகுப்பு, இதற்கும் கீழ் கல்வித் தகுதி உள்ளவா், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, தொழில் கல்வி, தையல் பயிற்சி படிப்பு, பொறியயல் படிப்பு ஆகியவற்றில் தோ்ச்சி பெற்றவா்கள் தங்களது சுய விவரக் குறிப்பு, கல்விச் சான்றிதழ் நகல்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.

முகாம் குறித்த விவரத்தை தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்: 04546-254510, கைபேசி எண்: 76959 73923 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.