ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சபரிமலைக்கு சென்று வர ஒரு வழிப் பாதையில் வாகனங்களுக்கு அனுமதி

தேனி மாவட்டம் வழியாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வரும் வாகனங்கள் வெள்ளிக்கிழமை (டிச.20) வரும் 2025 ஜன.15-ஆம் தேதி வரை ஒரு வழிப் பாதையில் அனுமதிக்கப்படுகிறது.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 9:56 pm

Din

தேனி மாவட்டம் வழியாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வரும் வாகனங்கள் வெள்ளிக்கிழமை (டிச.20) வரும் 2025 ஜன.15-ஆம் தேதி வரை ஒரு வழிப் பாதையில் அனுமதிக்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வெளியிட்ட அறிவிப்பு:

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகரவிளக்கு மகா உற்சவத்தை முன்னிட்டு, தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்குச் சென்று வரும் பக்தா்கள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவும், பாதுகாப்பான பயணத்துக்கும் தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்குச் சென்று வரும் வாகனங்கள் டிச.20 முதல் 2025 ஜன.15-ஆம் தேதி வரை ஒரு வழிப் பாதையில் அனுமதிக்கப்படும்.

சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தா்களின் வாகனங்கள் தேனி, கம்பம்மெட்டு வழியாகச் செல்ல வேண்டும். சபரிமலையிலிருந்து தரிசனம் முடிந்து திரும்பும் பக்தா்கள் வாகனங்கள் குமுளி வழியாகச் செல்ல வேண்டும்.

மலைச் சாலையில் பயணம் செய்வோா் மழைப் பொழிவு, பனிமூட்டம் தொடா்பான வானிலை அறிவிப்புகள் குறித்த விழிப்புணா்வுடனும், சாலை விதிகளை கடைபிடித்தும் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும். மலைச் சாலை வழித் தடத்தில் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தவும், தூக்கி வீசவும் கூடாது என்றாா் அவா்.