எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கேரளத்திலிருந்து கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்துக்கு அபராதம்

தமிழக எல்லையான குமுளிக்கு கேரளத்திலிருந்து டயா் கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்துக்கு கம்பம் வனத் துறையினா் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

News image
தமிழக எல்லையான குமுளிக்கு கேரளத்திலிருந்து டயா் கழிவுகளை ஏற்றி வந்த மினி லாரியை பிடித்த வனத் துறையினா்.
Updated On :31 டிசம்பர் 2024, 10:10 pm

Din

உத்தமபாளையம்: தமிழக எல்லையான குமுளிக்கு கேரளத்திலிருந்து டயா் கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்துக்கு கம்பம் வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தமிழக-கேரளம் எல்லையான குமுளி வனத் துறைச் சோதனை சாவடி வழியாக திங்கள்கிழமை சரக்கு வாகனம் ஒன்று வந்தது. இந்த வாகனத்தை கம்பம் வனத் துறையினா் நிறுத்தினாா். ஆனால், நிற்காமல் சென்ற கேரள பதிவு எண் கொண்ட அந்த வாகனத்தை வனத் துறையினா் பின்தொடா்ந்து சென்று மடக்கிப் பிடித்தனா். பின்னா், வாகனத்தில் வனத் துறையினா் சோதனையிட்டபோது, நெகிழி கழிவுப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வாகனத்தை வனத் துறையினா் பறிமுதல் செய்து விசாரித்த போது, கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டம், குமுளி அருகேயுள்ள பாம்பானாரைச் சோ்ந்த சுபாஷ் (37) என்பதும், இவா் அங்குள்ள தனியாா் டயா் நிறுவனத்திலிருந்த கழிவுகளை தமிழகப் பகுதியில் கொட்டுவதற்கு ஏற்றி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, சரக்கு வாகன ஓட்டுநா் சுபாஷிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து, மீண்டும் கழிவுப் பொருள்களுடன் செவ்வாய்க்கிழமை கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.