தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

எஸ்.டி.பி.ஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கம்பத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த எஸ்.டி.பி.ஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :1 ஜூலை 2024, 6:30 pm

Din

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், கம்பத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியினா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கம்பம் நகரத் தலைவா் சிராஜ்தீன் தலைமை வகித்தாா். அப்போது, கம்பம் நகராட்சியில் தெரு நாய்களின் தொல்லையால் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனா்.

எனவே, கம்பம் நகராட்சி பொதுமக்களின் பாதுகாப்புக்கு உறுதியளிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் கம்பம் நகர எஸ்.டி.பி.ஐ கட்சியினா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.