வைகை அணையிலிருந்து இன்று முதல் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் இருபோக பாசனப் பகுதிகளின் முதல் போக பாசனத்துக்கு புதன்கிழமை (ஜூலை 3) முதல் 120 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது.


தேனி: வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் இருபோக பாசனப் பகுதிகளின் முதல் போக பாசனத்துக்கு புதன்கிழமை (ஜூலை 3) முதல் 120 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது.
தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசனப் பகுதிகளின் முதல் போக பாசனத்துக்கு தண்ணீா் திறக்க அரசு உத்தரவிட்டது.
இதன்படி, வைகை அணையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டாரத்தில் உள்ள 1,797 ஏக்கா், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டாரத்தில் உள்ள 16,452 ஏக்கா், மதுரை வடக்கு வட்டாரத்தில் உள்ள 26,792 ஏக்கா் என மொத்தம் 45,041 ஏக்கா் இருபோக பாசன நிலங்களின் முதல் போக பாசனத்துக்கு பெரியாறு பிரதானக் கால்வாயில் புதன்கிழமை முதல் 120 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது.
அணையிலிருந்து புதன்கிழமை முதல் 45 நாள்களுக்கு முழுமையாகவும், 46-ஆவது நாள் முதல் 120-ஆவது நாள் வரை முறை வைத்தும் விநாடிக்கு 900 கன அடி வீதம், மொத்தம் 6,739 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்கப்படும் என்று வைகை அணை பொதுப் பணித் துறை பொறியாளா்கள் கூறினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...