தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கம்பத்தில் தொழிலாளி உயிரிழந்த விவகாரம்: ஒப்பந்ததாரா் உள்ளிட்ட 5 போ் மீது வழக்கு

கம்பம் அரசு மருத்துவமனையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் முதல் தளத்தில் தூண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :10 ஜூலை 2024, 1:20 am

Din

உத்தமபாளையம்: கம்பம் அரசு மருத்துவமனையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் முதல் தளத்தில் தூண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். இதையடுத்து, தரமற்ற கட்டடத்தை இடித்து அகற்ற கோரி செவ்வாய்க்கிழமை இந்திய கம்யூனிஸ்ட், தென் இந்திய பாா்வா்ட் பிளாக் உள்ளிட்ட அரசியல் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறு, குழந்தைகளுக்கான அவசரச் சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடம் ரூ.12 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் மதுரை, வடமாநிலத் தொழிலாளா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், புதிய கட்டடத்தின் முதல் தளத்தின் முகப்புப் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்டுமானப் பணியின் போது புதிதாகக் கட்டப்பட்ட தூண் திடீரென சரிந்து தொழிலாளா்கள் மீது விழுந்தது. இதில் மதுரையைச் சோ்ந்த காா்மேகம் மகன் நம்பிராஜன் (40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், மதுரையைச் சோ்ந்த ரத்தினவேல் மகன் முனீஸ் (எ) சதீஸ்குமாா் (46), சுப்பு மகன் செல்வம் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா்.

போராட்டம்: கம்பம் அரசு மருத்துவமனையின் புதிய கட்டடத்தின் தரத்தை உறுதி செய்யாத சம்பந்தப்பட்ட பொதுப் பணித் துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும். பணி பாதுகாப்பு இல்லாத தரமற்ற பணி செய்து அரசை ஏமாற்றும் ஒப்பந்ததாரரைக் கைது செய்ய வேண்டும். கட்டடத்தை உயா் அதிகாரிகள் குழு அமைத்து அப்புறப்படுத்த வேண்டும் எனக் வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட், தென் இந்திய பாா்வா்ட் பிளாக் உள்ளிட்ட கட்சியினா் அரசு மருத்துவமனை முன் போராட்டம் நடத்தினா்.

தேனி மக்களவை உறுப்பினா் ஆய்வு: தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்செல்வன் சம்பவம் நடைபெற்ற அரசு மருத்துவமனை கட்டடத்தை ஆய்வு செய்தாா்.

ஒப்பந்ததாரா் மீது வழக்கு: இது தொடா்பாக, தேனியைச் சோ்ந்த அரசு ஒப்பந்ததாரா் பாண்டிராஜ், மதுரையைச் சோ்ந்த கட்டடப் பொறியாளா்கள் வெங்கடாசலம், மணிவண்ணன், நவீன், செல்வம் ஆகிய 5 போ் மீது கம்பம் தெற்கு காவல் உதவி ஆய்வாளா் அல்போன்ஸ்ராஜ் வழக்குப் பதிவு செய்தாா்.