பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தேனி மாவட்டத்தில் 87 பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டித் திட்டம் விரிவாக்கம்

தேனி மாவட்டத்தில் 87 அரசுப் பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டித் திட்டம் திங்கள்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது.

News image
Updated On :15 ஜூலை 2024, 6:30 pm

Din

தேனி: தேனி மாவட்டத்தில் 87 அரசுப் பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டித் திட்டம் திங்கள்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது.

மாவட்டத்தில் கடந்த 2022-ஆண்டு முதல் கட்டமாக 51 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், இரண்டாம் கட்டமாக 375 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் அரசு சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டித் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தற்போது புதிதாக ஊரகப் பகுதிகளில் உள்ள 87 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

தேனி அருகேயுள்ள உப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் காந்திஜி நினைவு தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா, காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தாா். அப்போது, மாவட்டத்தில் காலை சிற்றுண்டித் திட்டத்தில் 513 அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 24,553 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனா் என்று ஆட்சியா் கூறினாா்.

இந்த நிகழ்ச்சியில் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தங்க.தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.எஸ்.சரவணக்குமாா், மாவட்ட ஊராட்சித் தலைவி ப்ரீதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இந்திராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.