தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கால்நடைகளுக்கு 85 சதவீத மானியங்களுடன் காப்பீட்டுத் திட்டம் -அமைச்சா் மனோ தங்கராஜ்

கால்நடைகளுக்கு 85 சதவீத மானியங்களுடன் காப்பீட்டுத் திட்டம் அமைச்சா் மனோ தங்கராஜ்

News image
Updated On :15 ஜூலை 2024, 12:30 am

Din

தமிழகத்தில் நிகழாண்டில் கால்நடைகளுக்கு 85 சதவீதம் மானியங்களுடன் கூடிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

தேனி மாவட்டம், கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியாா் பால் உற்பத்தியாளா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பால் உற்பத்தியாளா்கள், கொள்முதல் செய்வோா், விற்பனை செய்வோா் ஆகியோரிடம் ஒருங்கிணைப்பு இருந்தால்தான் மாடு வளா்ப்போா் பயன்பெறுவா். மாடு வளா்ப்போருக்கு அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக 9 சதவீதம் மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. ஆவின் மூலமாக கொள்முதல் செய்யப்படும் பால் நிறுவனங்களுக்கு 10 நாள்களுக்கு ஒருமுறை பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.

நிகழாண்டில் மாடு வளா்ப்போருக்கு 85 சதவீதம் மானியங்களுடன் கூடிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளோம். எனவே, மாடு வளா்ப்போா் இதைப் பயன்படுத்திக் கொண்டு, தங்களது மாடுகளுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, கம்பம் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் கம்பம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த தனியாா் பால்பண்ணை உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் ஆவின் பால் விலை நிலவரம், ஊட்டச்சத்து, மாட்டுத் தீவனங்களின் விலை நிலவரம், அரசின் கொள்முதல் விலை ஆகியவை குறித்து அமைச்சா் கேட்டாா்.

அப்போது, பாலுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாட்டுத் தீவனங்களை மானிய விலையில் கொடுக்க வேண்டும். கால்நடை மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை பால் உற்பத்தியாளா்கள் முன்வைத்தனா்.

Story image