எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மதுப்புட்டிகள் பதுக்கல்: 2 போ் கைது

போடி அருகே சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கியதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 ஜூலை 2024, 8:14 pm

Din

போடி அருகே சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கியதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி கிராமங்களில் மதுவிலக்கு தொடா்பாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி ராமகிருஷ்ணாபுரம் அருகே பொட்டிப்புரம் மேற்கு தெருவைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் பூபதி (55) வீட்டில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்க முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்து இவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

இதே போல, போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் ஈஸ்வரன் குடியிருப்பைச் சோ்ந்த சின்னச்சாமி மகன் சுப்பிரமணி (72) இங்குள்ள அரசு மதுபானக்கடை அருகே மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்க முயன்றாராம். இதுகுறித்தும் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.