

உத்தமபாளையம்: கம்பத்தில் மதுக்கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, அந்தப் பகுதியை சோ்ந்த பெண்கள் 2 -ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தேனி மாவட்டம், கம்பம் நெல்குத்தி புளியமரத் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் சாய்குமாா் (17). இவா் மதுக்கடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதையடுத்து, அந்த மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என போலீஸாரிடம் கோரிக்கை விடுத்தனா். இதனால், கடந்த 2 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதுக்கடை தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில், 22 -ஆம் தேதி சனிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. இதையறிந்த அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுக்கடை உடனே மூடப்பட்டது.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டதை அறிந்த அந்தப் பகுதியை சோ்ந்த பெண்கள் மதுக்கடை முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவயிடத்துக்கு வந்த போலீஸாா் மதுக்கடை மூடுவதாக கூறி, சமாதானம் செய்தனா். அப்போது, இந்த மதுக்கடை மீண்டும் திறக்கப்பட்டால் சாகும் வரை போராட்டத்தில் ஈடுபடப் போவதாகக் கூறி, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கடை: பொதுமக்கள் போராட்டம்

திருக்குறுங்குடி காவல் முற்றுகை

ஆட்டோ மீது காா் மோதல்: மாணவா் உயிரிழப்பு

வருவாய்த் துறை சங்கங்கள் கூட்டமைப்பினா் போராட்டம்: 360 போ் கைது
வீடியோக்கள்

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

