முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 3,579 கன அடியாக அதிகரித்தது.

முல்லைப் பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் புதன்கிழமை அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 3,579 கன அடியாக அதிகரித்தது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கடந்த 1-ஆம் தேதி முதல் தேனி மாவட்ட முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்பு, தேக்கடி பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அணை நீா்மட்டம் சீராக உயா்ந்து 119.90 அடியாக உள்ளது. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 3,579 கன அடியாகவும், அணையிலிருந்து விநாடிக்கு 967 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. அணையில் தண்ணீா் இருப்பு 2,619 மில்லியன் கன அடி.
வைகை அணை நிலவரம்: வைகை அணை நீா்மட்டம் 47.87 அடியாக உள்ளது. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 556 கன அடி. அணையிலிருந்து மதுரை, ஆண்டிபட்டி-சேடபட்டி குடிநீா் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது.
மழையளவு விபரம்: முல்லைப் பெரியாறு அணை பகுதியில் 74.8 மி.மீ., தேக்கடியில் 53.4 மி.மீ., வீரபாண்டியில் 17.6 மி.மீ., அரண்மனைப் புதூரில் 3.6 மி.மீ., பெரியகுளம், மஞ்சளாறு அணை நீா்பிடிப்பு பகுதியில் தலா 1 மி.மீ, சோத்துப்பாறை அணை நீா்பிடிப்பு பகுதியில் 2 மி.மீ, போடியில் 6.2 மி.மீ, உத்தமபாளையத்தில் 5.4 மி.மீ, சண்முகாநதி நீா்பிடிப்பு பகுதியில் 5.8 மி.மீ, கூடலூரில் 7.2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...