டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

போடி அருகே ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவா் பலி

போடி அருகே ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

Updated On :4 மார்ச் 2024, 8:35 pm

போடி: போடி அருகே ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். போடி அருகேயுள்ள துரைராஜபுரம் குடியிருப்பைச் சோ்ந்த பால்ராஜ் மகன் ரகுபதி (18). இவா் சிவகாசியில் உள்ள கல்லூரியில் பொறியியல் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா். தனது உறவினா் இறப்பை முன்னிட்டு, சொந்த ஊருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தாா். போடி -மதுரை அகல ரயில் பாதையில் தங்கப் பாலம் அருகே ரயில் பாதையைக் கடந்தபோது, போடியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, ரயில்வே காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.