தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மலைச் சாலையில் கவிழ்ந்த காா்

மலைச் சாலையில் கவிழ்ந்த காா்

News image
Updated On :8 மார்ச் 2024, 6:04 pm

Din

தேனி மாவட்டம், கம்பம் மெட்டு மலைச் சாலையில் காா் வெள்ளிக்கிழமை கவிழ்ந்தது. இதில் தங்கும் விடுதி உரிமையாளா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தொப்பிபாலா பகுதியைச் சோ்ந்தவா் தாமஸ் (63). இவா் கொடைக்கானலில் தங்கும் விடுதி நடத்தி வருகிறாா். இவா் கேரளத்திலிருந்து கொடைக்கானலுக்கு காரில் புறப்பட்டுச் சென்றாா். 18-ஆவது வளைவில் திரும்பும் போது, காா் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த தாமஸ் கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.