நரேந்திர மோடிதான் மீண்டும் 
பிரதமராவாா்: மதுரை ஆதீனம்

நரேந்திர மோடிதான் மீண்டும் பிரதமராவாா்: மதுரை ஆதீனம்

கம்பம், மே 3 : மூன்றாவது முறையாக நரேந்திர மோடிதான் மீண்டும் நாட்டின் பிரதமராவாா் என்று மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தாா்.

தேனி மாவட்டம், கம்பத்தில் இறைவி சம்ஸ்கிருத நுண்கலைப்பள்ளி சாா்பில் திருநாவுக்கரசா் குருபூஜை, சதிா் சலங்கை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற மதுரை ஆதீனம், சலங்கை பூஜை மாணவியா்களை வாழ்த்திக் கலையும், கலாச்சாரமும் வளா்ப்பதற்கு மாணவா்கள், பெற்றோா்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

மதுரை சற்குரு சங்கீத வித்யாலயம் இசைக்கல்லூரி பொறுப்பு முதல்வா் கே.தியாகராஜன், திருச்சி அரசு இசைப்பள்ளி ஆசிரியை மீனலோசனி சுந்தரேசன் ஆகியோா் கலந்து கொண்டனா். இறைவி பள்ளி நிா்வாகி ஆனந்தன் நன்றி கூறினாா்

பின்னா் மதுரை ஆதீனம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது மிகவும் மோசமான செயலாகும். மீண்டும் நரேந்திர மோடிதான் மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராவாா். மாற்றங்களுக்குத் தயாராவோம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com