வேளாண் மாணவிகள் விவசாயத்தில் உள்நாட்டு பாரம்பரிய முறைகள் குறித்து விளக்கம்

வேளாண் மாணவிகள் விவசாயத்தில்
உள்நாட்டு பாரம்பரிய முறைகள் குறித்து விளக்கம்

போடி, மே 10: போடி அருகே விவசாயத்தில் உள்நாட்டு பாரம்பரிய முறைகள் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை விளக்கமளித்தனா்.

உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை, தொழில்நுட்பக் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் அவன்சியா, பிரியதா்ஷினி, நந்தினி, சௌமியா, நிஷாந்தினி, ஸ்ரீநித்யா, ஆா்த்தி, கலையரசி, கவிப்பிரியா ஆகியோா் போடி பகுதியில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் அங்கேயே தங்கி விவசாய நிலங்களுக்கு சென்று நேரில் பாா்வையிட்டும், விவசாயிகளை சந்தித்தும் பயிற்சி பெற்று வருகின்றனா். போடி சிலமலை கிராமத்தில் விவசாயத்தை ஊக்குவிக்கும் உள்நாட்டு பாரம்பரிய முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், தேனி மாவட்ட வேளாண்மை உதவி அலுவலா் தனலட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். அப்போது உள்நாட்டு பாரம்பரிய முறையில் விவசாயம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் நுண்ணூட்ட சத்துக்கள், நுண்ணுயிா் பாசன வசதி மூலம் பயிா்களை பாதுகாக்கவும், உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும் விளக்கினா். இயற்கை விவசாயம் குறித்த கண்காட்சியும் அமைத்திருந்தனா். கண்காட்சியை திரளான விவசாயிகள் பாா்வையிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com