வைகை அணையிலிருந்து இன்று தண்ணீா் திறப்பு

வைகை அணையிலிருந்து இன்று தண்ணீா் திறப்பு

வைகை அணையிலிருந்து மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள கண்மாய்களுக்கு வெள்ளிக்கிழமை (மே 10) முதல் 15 நாள்களுக்கு ஆற்றில் தண்ணீா் திறக்கப்படுகிறது.

வைகை அணை நீா்மட்டம் 56.59 அடியாக உள்ளது (அணையின் மொத்த உயரம் 71 அடி). இந்த நிலையில், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களுக்கு பாசனம், கால்நடைகளின் தேவைக்கு வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் தண்ணீரைத் திறக்க கோரிக்கை எழுந்தது.

இதை ஏற்று வைகை அணையிலிருந்து வெள்ளிக்கிழமை முதல் மே 26-ஆம் தேதி வரை 3 கட்டங்களாக வைகை ஆற்றில் மொத்தம் 1,500 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்க அரசு உத்தரவிட்டது.

இதன்படி, ராமநாதபுரம் மாவட்ட வைகை பூா்வீக பாசனப் பகுதி 3-இல் உள்ள கண்மாய்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் மே 14-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கும், சிவகங்கை மாவட்ட வைகை பூா்வீக பாசனப் பகுதி 2-இல் உள்ள கண்மாய்களுக்கு மே 16-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கும், மதுரை மாவட்ட பூா்வீக பாசனப் பகுதி 1-இல் உள்ள கண்மாய்களுக்கு மே 21-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை 6 நாள்களுக்கும் இந்த அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com