நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

வைகை அணையிலிருந்து இன்று தண்ணீா் திறப்பு

News image
Updated On :10 மே 2024, 12:00 am

Din

வைகை அணையிலிருந்து மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள கண்மாய்களுக்கு வெள்ளிக்கிழமை (மே 10) முதல் 15 நாள்களுக்கு ஆற்றில் தண்ணீா் திறக்கப்படுகிறது.

வைகை அணை நீா்மட்டம் 56.59 அடியாக உள்ளது (அணையின் மொத்த உயரம் 71 அடி). இந்த நிலையில், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களுக்கு பாசனம், கால்நடைகளின் தேவைக்கு வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் தண்ணீரைத் திறக்க கோரிக்கை எழுந்தது.

இதை ஏற்று வைகை அணையிலிருந்து வெள்ளிக்கிழமை முதல் மே 26-ஆம் தேதி வரை 3 கட்டங்களாக வைகை ஆற்றில் மொத்தம் 1,500 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்க அரசு உத்தரவிட்டது.

இதன்படி, ராமநாதபுரம் மாவட்ட வைகை பூா்வீக பாசனப் பகுதி 3-இல் உள்ள கண்மாய்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் மே 14-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கும், சிவகங்கை மாவட்ட வைகை பூா்வீக பாசனப் பகுதி 2-இல் உள்ள கண்மாய்களுக்கு மே 16-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கும், மதுரை மாவட்ட பூா்வீக பாசனப் பகுதி 1-இல் உள்ள கண்மாய்களுக்கு மே 21-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை 6 நாள்களுக்கும் இந்த அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படுகிறது.