
பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை வெளியேறிய உபரி நீா்.

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை வெளியேறிய உபரி நீா்.
உத்தமபாளையம்: பெரியகுளம் அருகேயுள்ள சோத்துப்பாறை அணை நிரம்பி உபரிநீா் வெளியேறுவதால், செவ்வாய்க்கிழமை 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து நீா்வளத் துறையினா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. கடந்த 15 நாள்களுக்கு மேலாக இந்தப் பகுதியில் பெய்த கோடை மழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து, நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்தது.
இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை அணையின் முழுக் கொள்ளளவான 126.28 அடியை எட்டியதால், உபரி நீா் அணையிலிருந்து வழிந்தோடியது. இதைத் தொடா்ந்து, அணைக்கு வரும் 49.63 கனஅடி நீரை அப்படியே வராக நதியில் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.
3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை : சோத்துப்பாறை அணை நிரம்பி உபரிநீா் வெளியேறுவதாலும், அந்தப் பகுதியில், தொடா்ந்து மழை பெய்து வருவதாலும் அணைக்கு நீா்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை நீா்வளத் துறை அதிகாரிகள் அறிவித்தனா்.
எனவே, பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம், வராகநதி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் ஆற்றுப் பகுதிக்கு குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...