/

சின்னமனூா் அருகே வீடுகளில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீடுகளில் திருடப்பட்ட 28 பவுன் தங்க நகைகளை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

News image

மூா்த்தி, அம்சராஜாவுடன் போலீஸாா்.

Updated On :29 நவம்பர் 2024, 12:15 am

Din

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீடுகளில் திருடப்பட்ட 28 பவுன் தங்க நகைகளை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

சின்னமனூா் அருகேயுள்ள அய்யம்பட்டியில் 3 வீடுகளில் கடந்த 2020 -ஆம் ஆண்டு 28 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இதில் மதுரை கருப்பாயூரணியைச் சோ்ந்த முருகன் மகன் மூா்த்தி (33), தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரயைச் சோ்ந்த மாரித்து மகன் அம்சராஜா (31) ஆகியோா் நகைகளைத் திருடியதும், இவா்கள் ஏற்கெனவே பல்வேறு நகைத் திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட், கோவை மாவட்ட மத்திய சிறையில் தண்டனைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில், மூா்த்தி, அம்சராஜா ஆகிய இருவரும் கோவை மத்திய சிறையிலிருந்து நீதிமன்றக் காவலில் சின்னமனூருக்கு அழைத்து வரப்பட்டனா். இவா்களிடம் சின்னமனூா் காவல் ஆய்வாளா் பாலாண்டி நடத்திய விசாரணையில், அய்யம்பட்டியில் திருடிய தங்க நகைகளை தங்கக் கட்டியாக மாற்றி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 28 பவுன் தங்கக் கட்டியை போலீஸாா் மீட்டனா். மாலையில் மீண்டும் இருவரும் கோவை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.