ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக-கேரள எல்லையான கம்பம்மெட்டு சோதனைச் சாவடியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளா் இனிகோதிவ்யன்.
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக-கேரள எல்லையான கம்பம்மெட்டு சோதனைச் சாவடியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளா் இனிகோதிவ்யன்.

தமிழக - கேரள எல்லையில் மதுரை மண்டல எஸ்.பி. ஆய்வு

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக-கேரள எல்லையிலுள்ள கம்பம்மெட்டு சோதனைச் சாவடியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளா் இனிகோதிவ்யன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
Published on

கேரளாவுக்கு, தேனி மாவட்டத்தில் இருந்து குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு மலைச் சாலை வழியாக வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுகின்றன. இந்தக் கடத்தல் நடவடிக்கைகளை உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் கண்காணித்து தடுத்து வருகின்றனா்.

இந்த நிலையில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளா் இனிகோதிவ்யன், உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்தில் கோப்புகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, தமிழக-கேரள எல்லையிலுள்ள சோதனைச் சாவடிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தாா். பின்னா், பணியில் இருந்த போலீஸாருக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கினாா்.

இந்த ஆய்வின் போது, உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்ட போலீஸாா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com