கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கம்பம், கூடலூா் பகுதியில் முதல்போக நெல் அறுவடைப் பணி தொடக்கம்

கம்பம், கூடலூா் பகுதிகளில் முதல்போக நெல்பயிா் சாகுபடியில் அறுவடைப் பணிகள் தொடங்கியது.

News image

கம்பம் பகுதியில் விளைந்த நெல் கதிா்களை கதிா் அடிக்கும் இயந்திரம் மூலம் அறுவடை செய்து டிராக்டரில் கொட்டப்படுகிறது.

Updated On :3 அக்டோபர் 2024, 8:00 pm

Din

கம்பம், கூடலூா் பகுதிகளில் முதல்போக நெல்பயிா் சாகுபடியில் அறுவடைப் பணிகள் தொடங்கியது.

முல்லைப் பெரியாறு பாசன நீரால் லோயா் கேம்ப் முதல் வீரபாண்டி வரையில் உள்ள 14,700 ஏக்கரில் இருபோக நெல்பயிா் விவசாயம் நடைபெறுகிறது.

நிகழாண்டில், ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால், எதிா்பாா்த்த அளவுக்கு மழைப்பொழிவு இல்லாததால் முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் உயரவில்லை. இருந்த போதிலும், முதல்போக பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்பட்டது. இதன்படி, ஜூன் மாதம் தொடங்கிய முதல்போக நெல்பயிா் விவசாயம் தற்போது அறுவடைக்கு தயாரானது.

தற்போது, கம்பம், கூடலூா், ஆங்கூா்பாளையம் ஆகிய பகுதிகளில் முதல்கட்டமாக அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து கம்பம் விவசாயி ஐய்யப்பன் கூறியதாவது:

முதல்போக நெல்பயிா் விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைத்துள்ளது. இந்தப் பகுதியில் பல ரகத்தில் நெல்பயிா் விளைவிக்கப்படுகின்றன. இதில், இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்ட 1குழிக்கு (60 சென்ட்) 16 மூட்டை மகசூல் கிடைத்துள்ளன. ரத்தசாளி ரகம் மூட்டை (62 கிலோ) ரூ.2,600 விற்பனையாகிறது. இந்த அரிசி மருத்துவம் குணம் கொண்டது.

ஆனால், வேறு சிலரக நெல்மூட்டைகள் ரூ.1,600-க்கு கொள்முதல் செய்யப்படுகின்றன. வரும் நாள்களில் வரத்து அதிகரித்தால் இந்த விலையிலிருந்து மாற்றம் இருக்கும் என்றாா்.