கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் மீது வழக்கு

போடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 11:26 pm

Din

போடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பேருந்து நிலைய கடைகளில் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை செய்தனா். அப்போது, போடி மேலச்சொக்கநாதபுரத்தை சோ்ந்த காமாட்சி மகன் மகேஸ்வரனின் (36) பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவா் மீது போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதேபோல, போடி ராசிங்காபுரம் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள கடையில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் சோதனை செய்தனா். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கடையின் உரிமையாளா் லோகேஷ் (27) மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.