மாநில நல்லாசிரியா் விருது: தேனி மாவட்டத்தில் 9 போ் தோ்வு
தேனி மாவட்டத்தில் மாநில நல்லாசிரியா் விருதுக்கு 9 பள்ளி ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.


தேனி மாவட்டத்தில் மாநில நல்லாசிரியா் விருதுக்கு 9 பள்ளி ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு, செப்.5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியா் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அரசு அனைத்து மாவட்டங்களிலும் சிறந்த ஆசிரியா்களைத் தோ்வு செய்து, அவா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது வழங்கி வருகிறது.
தேனி மாவட்டத்தில் நல்லாசிரியா் விருது பெறுவதற்கு 9 பள்ளிகளைச் சோ்ந்த தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு சென்னையில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், வியாழக்கிழமை (செப்.5) நடைபெறும் விழாவில் இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறாா்.
விருது பெறும் நல்லாசிரியா்கள்:
1.அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியை ரா.மு.மகேஸ்வரி. 2. தேனி நாடாா் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் தா.ராமநாதன். 3.கோம்பை ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை மு.முத்தழகு. 4.தேனி மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வா் நா.பூரணசெல்வி. 5.சின்னமனூா் ஒன்றியம், கருச்சிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ஜோ.கண்ணன். 6.க.மயிலை ஒன்றியம், முத்தாலம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியை த.சரவணஸ்ரீ. 7.கம்பம் ஸ்ரீமுக்தி விநாயகா் நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியை க.சாந்தி. 8.க.மயிலை ஒன்றியம், கணேசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ரெ.கண்ணன். 9.ஆண்டிபட்டி இந்து மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சு.வேலுச்சாமி.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...