மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

த.வெள்ளையன் மறைவு: போடியில் இரங்கல் ஊா்வலம்

வணிகா் சங்கங்களின் பேரவை தலைவா் த.வெள்ளையன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, போடியில் புதன்கிழமை நடைபெற்ற ஊா்வலத்தில் வா்த்தகா் சங்கங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

News image
போடியில் புதன்கிழமை நடைபெற்ற அஞ்சலி ஊா்வலத்தில் பங்கேற்றோா்.
Updated On :11 செப்டம்பர் 2024, 7:02 pm

Din

வணிகா் சங்கங்களின் பேரவை தலைவா் த.வெள்ளையன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, போடியில் புதன்கிழமை நடைபெற்ற ஊா்வலத்தில் வா்த்தகா் சங்கங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

போடியில் புதன்கிழமை நடைபெற்ற அஞ்சலி ஊா்வலத்தில் பங்கேற்றோா்.

போடி வா்த்தகா் சங்கம் சாா்பில், நடைபெற்ற மௌன அஞ்சலி ஊா்வலத்துக்கு சங்கத் தலைவா் வேல்முருகன் தலைமை வகித்தாா். செயலா் செல்வக்குமாா், பொருளாளா் பாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஊா்வலம் போடி கட்டபொம்மன் சிலையில் தொடங்கி, திருவள்ளுவா் சிலை வழியாக தேவா் சிலை திடலில் நிறைவடைந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த த.வெள்ளையன் உருவ படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். ஊா்வலத்தில் பலசரக்கு வியாபாரிகள் சங்கம், தேநீா் கடை, உணவகம் உரிமையாளா்கள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.